ஜோதி அறக்கட்டளை சார்பில் தஞ்சையில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்.
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ஜோதி அறக்கட்டளை அலுவலகத்தில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் வருமானம் இன்றி முடங்கிக் கிடக்கும் மக்களுக்கும் உதவி செய்யும் வகையில் விலையில்லா அரிசி மற்றும் மல்லிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் தஞ்சை நகரப் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் கலந்துகொண்டு நலத்திட்டங்களை வழங்கினார்.
அப்போது அவர் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ஆதரவற்றோர் மற்றும் முதியோர் நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு சமூக நலப்பணிகளை ஜோதி அறக்கட்டளை தொடர்ந்து ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியது என தெரிவித்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேலாளர் ஞானசுந்தரி ஆகியோர் செய்தனர்.
CATEGORIES தஞ்சாவூர்