டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் ஒன்றிய அரசின் குழு வந்து பார்வையிட்ட பின் நெல் ஈரப்பத அளவு உயர்த்தி வழங்கப்படும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டி நுகர் பொருள் வாணிப கழக திறந்தவெளி சேமிப்பு கிடங்கு கட்டுமான பணியை தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் குறுவை நெல் கொள்முதல் பணி செப்டம்பர் 1 தேதியே தொடங்கி நடைபெற்று வருகிறது கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்படும் தேவைப்படும் இடங்களில் 2 கொள்முதல் நிலையங்கள் செயல்படும் எனவும் தெரிவித்த அமைச்சர் தற்பொழுது மழை பெய்து வருவதால் ஈரப்பத அளவை உயர்த்தி வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடந்த முறை தமிழக அரசு ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்து ஒன்றிய அரசு குழுவை அமைத்து தமிழகத்தில் நேரடியாக ஆய்வு செய்து அனுமதி அளித்த பின்பு ஈரப்பத அளவு உயர்த்தி கொள்முதல் செய்யப்பட்டது.
இதை போல் தற்போது தமிழக முதல்வர் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்து ஒன்றிய அரசின் குழு வந்து பார்வையிட்ட பின் ஈரப்பத அளவு உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமைகளிலும் நல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.
