தகவல் பெறும் உரிமை சட்ட இலவச பயிலரங்கம் தஞ்சையில் நடைபெற்றது.

தகவல் பெறும் உரிமை சட்ட இலவச பயிலரங்கம் தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள கோனூர் நாடு மக்கள் வளர்ச்சி அறக்கட்டளை அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் நல்லோர் வட்டத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பாலு தலைமை ஏற்று துவக்கி வைத்தார். இந்த விழாவில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் சிறப்பு பயிற்சியாளர் மதுரை ஹாக்கீம் கலந்து கொண்டு பயற்சி வழங்கினார்.
இதில் 24.09.2022 காலை 9 மணி முதல் 9.30 மணி வரை நிகழ்ச்சி துவக்கப்பட்டு சிறப்புரை நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து காலை 10 மணி முதல் மாலை4 மணி வரை தகவல் அறியும் உரிமைச் சட்டம்பயிற்சி வழங்கப்பட்டது. மாலை 4 மணி முதல் 5 மணி வரை சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதை தொடர்து 5 மணிக்கு நல்லோர் வட்ட கலந்தாய்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில்பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 100 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியைநல்லோர் வட்டத்தின் தஞ்சை மாவட்ட பொருப்பாளர் திருமேனி, சமூக ஆர்வலர்சுரேஷ். அருள்சர்மா, திலிப்குமார், அபினேஸ் ஆகியோர் விழாக்கான ஏற்பாடு செய்து செய்தனர். இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.