BREAKING NEWS

தஞ்சாவூரில் உணவு தொழில்நுட்ப பொருட்காட்சியை மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் தொழில் அமைச்சகத்தின் செயலர் அனிதா பிரவீன் தொடங்கி வைத்தார்.

 மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் சிறுதானிய அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் நவீன பதனிடும் முறைகள் குறித்து இரண்டு நாட்கள் உணவு தொழில்நுட்ப பொருட்காட்சி நடைபெறுகிறது.

இதில் அந்நிறுவனத்தில் பயிற்சி பெற்று தொழில் முனைவோர்களாக முன்னேறி உள்ளவர்கள் சிறுதானியம் உணவு உற்பத்தி குறித்து விளக்கும் பொருட்காட்சியை அமைத்துள்ளனர்.சுமார் 40க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

தேசிய உணவு தொழில்நுட்பம்,தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த உணவுப் பொருட்காட்சி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது .இதனை உணவுப் பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகத்தின் செயலர் அனிதா பிரவீன் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

முதல் நாளான இன்று ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் இலவசமாக பொருட்காட்சியில் பங்கேற்றனர் ,நாளை பொதுமக்கள், விவசாயிகள், தொழில் முனைவோர்கள் கண்காட்சியை காணுமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுதானியத்தை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துதல், நவீன பதனிடும் முறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )