BREAKING NEWS

தஞ்சாவூரில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஜெயலலிதா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தஞ்சாவூரில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஜெயலலிதா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கில் சென்னையில் நடைபெற்று முடிந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என ஐகோர்ட் இன்று உத்தரவு பிறப்பித்தது இதையடுத்து தஞ்சாவூர் ரயிலடியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் மேலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடினர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அறிவுடை நம்பி சண்முகபிரபு சாமிநாதன் அமுதா ரவிச் சந்திரன் அதிமுக எதிர்கட்சி தலைவர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )