BREAKING NEWS

தஞ்சாவூரில் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வயலின் இசையை கற்றுத்தரும் 75 வயது இசைக்கலைஞர்.

தஞ்சாவூரில் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வயலின் இசையை கற்றுத்தரும் 75 வயது இசைக்கலைஞர்.

தஞ்சாவூர் மாவட்டம் கலைகளின் பிறப்பிடமாக உள்ளது, இசைக்கலை, நாட்டிய கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை, கட்டிடக்கலை, போன்றவற்றின் பிறப்பிடமாக தஞ்சை மாவட்டம் சிறந்து விளங்குகிறது அத்தகைய இசை கருவிகளில் ஒன்றான வயலின் இசையை தஞ்சையைச் சேர்ந்த மூத்த வயலின் இசைக்கலைஞர் நடராஜன் (75) என்பவர் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் இலவசமாக கற்றுத் தருகிறார்.

 

 

பாரம்பரியமாக உள்ள இந்த வயலின் இசையை வாசிப்பவர்கள் தஞ்சையில் அரிதாகிவிட்ட காலத்தில் இக்கலையை மீட்டுருவாக்கம் செய்யும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு இசைப்பயிற்சி கற்றுத் தருகிறார்,இவர் பிரபல இசை கலைஞர் டிஆர் பாப்பாவின் உறவினர் ஆவார், மாணவர்களும் விடுமுறை நாட்களில் ஆர்வமுடன் வந்திருந்து வயலின் இசையை கற்று வருகின்றனர்.

 

இது குறித்து வயலின் இசை கலைஞர் நடராஜன் கூறும்போது தஞ்சாவூரில் வயலின் இசை கலைஞர்கள் 20 க்கும் மேற்பட்டவர்கள் வயலின் வாசித்த நிலையில் தற்போது ஒரு சிலரே உள்ளனர் ஆகவே இக்கலையை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு கற்றுத் தருவதாகவும், மேடை கச்சேரிகள் குறைந்துள்ள நிலையில் இந்த கலை மறைந்து விடும் நிலையில் உள்ளதால் இதை மாணவர்களுக்கு கற்று தருவதாக தெரிவித்தார்.

Share this…

CATEGORIES
TAGS