தஞ்சாவூரில் பொதுமக்களிடம் போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி புத்தாண்டு கொண்டாடிய போலீசார்.
ஆங்கில புத்தாண்டு 2023 தொடங்குவதை முன்னிட்டு அதை உற்சாகமாக கொண்டாடும் வகையிலும், விபத்து இல்லா தஞ்சையை உருவாக்கும் வகையிலும்,
தஞ்சாவூரில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, பெண் கல்வி ஊக்குவிப்பு,
மற்றும் இலவச உதவி எண்கள் ஆகியவற்றை பொதுமக்களிடம் விழிப்புணர்வை பள்ளி மாணவி கனிமொழி மூலம் பாட்டு பாடி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இதில் பள்ளி மாணவிகள் சாலை விதிகளை மதிப்போம், பெண்கள் குழந்தைகளுக்கான எதிரான பாலியல் வன்முறை தடுத்திடுவோம், பெண் கல்வியை ஊக்குவிப்போம்,
தலைக்கவசம் முக கவசம் அணிவோம், உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இதில் போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டனர்.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS தஞ்சாவூர் மாநகராட்சிதஞ்சாவூர் மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன்முக்கிய செய்திகள்விபத்து இல்லா தஞ்சை விழிப்புணர்வு