BREAKING NEWS

தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடமாடும் உணவு பகுப்பாய்வு ஆய்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடமாடும் உணவு பகுப்பாய்வு ஆய்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தரம் குறைந்த மற்றும் கலப்படமுள்ள உணவுப் பொருட்கள், லேபில் குறைபாடு மற்றும் தடை செய்யப்பட்ட உணவு மாதிரிகள் மூலம் 569 வழக்குகள் பதிவு செய்து 64 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

 

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் உள்ள உணவுப் பொருட்களின் தரம் அதில் கலப்பட உள்ளதா? என்பதை கண்டறிந்து அது குறித்து தஞ்சாவூர் மாவட்ட மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடமாடும் உணவு பகுப்பாய்வு ஆய்வு வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

 

 

இந்த நடமாடும் உணவு ஆய்வகத்தில் குடிநீர், பால், சமையல், எண்ணெய் , பருப்பு வகைகள், இனிப்பு கார உணவு வகைகள், மற்றும் இதர மளிகை பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களின் தரத்தினை உடனடியாக ஆய்வு செய்வதற்கு ஸ்பாட் டெஸ்ட் உபகரணங்கள் இந்த வாகனத்தில் உள்ளன.

 

இதில் கண்டறிந்த தரமற்ற உணவு மாதிரிகளின் தன்மை உறுதி செய்ய மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்படும், தரம் குறைவு அல்லது கலப்படம் என கண்டறியப்படும் உணவு மாதிரிகள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

 

 

தரம் குறைந்த கலப்படம் உள்ள உணவு பொருட்கள், லேபிள் குறைபாடு மற்றும் தீங்கு விளைவிக்க கூடிய உணவு மாதிரிகள் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 569 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அரசுக்கு 64 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

 

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS