BREAKING NEWS

தஞ்சாவூர் கைவினைத் தொழில் செய்வோர் கூட்டுறவு குடிசை தொழிற்சங்கத்தில் கொலு கண்காட்சி.

தஞ்சாவூர் கைவினைத் தொழில் செய்வோர் கூட்டுறவு குடிசை தொழிற்சங்கத்தில் கொலு கண்காட்சி.

தஞ்சாவூர் கைவினைத் தொழில் செய்வோர் கூட்டுறவு குடிசை தொழிற்சங்கத்தில் கொலு கண்காட்சி தொட்ங்கபட்டுள்ளது.

 

இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரிப் பண்டிகை வரும் 26ந் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

 

 

இதனையடுத்து தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள கைவினைத் தொழில் செய்வோர் கூட்டுறவு குடிசை தொழிற்சங்கத்தில் கொலு கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது.

 

 

இக்கொலு கண்காட்சியில் களிமண், காகிதக்கூழ், பளிங்குத்தூள், மரம், கொல்கத்தா களிமண் போன்ற பலவகை கைவினைப் பொருட்களினால் தயாரிக்கப்பட்ட கொலு பொம்மைகள் மற்றும் விவசாயம் செய்யும் காட்சிகள், கொலுப்படி செட், கிரகப்பிரவேச செட், வேதமூர்த்திகள் அஷ்ட பைரவர்கள், 63 நாயன்மார்கள், சித்தர்கள் நவகிரகங்கள், தசாவதாரம் செட், அஷ்டலெட்சுமி செட், விநாயகர் செட். குபேரன் செட், கிரிவலம் செட், திருமலை செட், கோபியர் செட், தர்பார் செட். மைசூர் தசரா செட். பெண் பார்த்தல், நிச்சயம் திருமணம் வளைகாப்பு மற்றும்

 

 

கருட சேவை செட், வைகுண்டம் செட். துர்கா பூஜை செட், அஷ்ட வராகி செட், நவதுர்க்கை செட், கிருஷ்ணர் விளையாட்டு போன்ற பொம்மைகள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ராஜஸ்தான், கொல்கத்தா, புனே, புதுடெல்லி போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் வரவழைக்கப்பட்டு கண்காட்சியும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. 

 

 

இக்கண்காட்சி வரும் அக்டோபர் 6ந் தேதி வரை நடைபெற உள்ளது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )