BREAKING NEWS

தஞ்சை, பழமையான பள்ளி கட்டிடத்தை அப்புறபடுத்தி குழந்தைகளின் பாதுகாப்பை அரசு உறுதிபடுத்துமா. சி.பி.எம்.கோரிக்கை.

தஞ்சை, பழமையான பள்ளி கட்டிடத்தை அப்புறபடுத்தி குழந்தைகளின் பாதுகாப்பை அரசு உறுதிபடுத்துமா. சி.பி.எம்.கோரிக்கை.

நாகரசம்பேட்டை ஊராட்சியில் பழமையான பள்ளி கட்டிடத்தை அப்புறபடுத்தி குழந்தைகளின் பாதுகாப்பை அரசு உறுதிபடுத்துமா. சி.பி.எம்.கோரிக்கை.

 

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 75.நாகரசம்பேட்டை ஊராட்சியில் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி

எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையிலுள்ள பள்ளிகட்டிடத்தை அப்புறபடுத்தி பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்திட வேண்டுமென அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. 

 

இது குறித்து தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகரசம்பேட்டை செயலாளர் நா.சத்தியராஜ் அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது :

 

 தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 75.நாகரசம்பேட்டை ஊராட்சியில் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

 

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை முப்பது குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்திற்க்குள் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளி கட்டிடம் உள்ளது. எந்த நேரத்திலும் இடிந்து விழும் தருவாயில் இருக்கும் அந்த கட்டிடத்தின் உள்ளேயும், வெளியேயும் குழந்தைகள் அவ்வப்போது விளையாடிவருகின்றனர்.

 

எனவே எந்த நேரத்திலும் குழந்தைகளின் மீது இடிந்து விழும் ஆபத்து உள்ளது. குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தான இந்த கட்டிடத்தை இடித்து அப்புறபடுத்தி புதிய தரமான கட்டிடம் வேண்டுமென்று பலமுறை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

 

 எனவே அரசும் ,மாவட்ட நிர்வாகமும் உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு உரிய தீர்வை எட்டிட வேண்டும். தீர்வு ஏற்படாத பட்சத்தில் மக்களை திரட்டி நூதன போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )