BREAKING NEWS

தஞ்சை மருத்துவக்கல்லூரியில் உலக பிசியோதெரபி தினத்தையொட்டி நேற்று விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.

தஞ்சை மருத்துவக்கல்லூரியில் உலக பிசியோதெரபி தினத்தையொட்டி நேற்று விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.

உலக பிசியோதெரபி தினம் செப்டம்பர் மாதம் 8-ந்தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சை மருத்துவக்கல்லூரியில் உலக பிசியோதெரபி தினத்தையொட்டி நேற்று விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.

 

தஞ்சை மருத்துக்வகல்லூரி வளாகத்தில் நடந்த இந்த ஊர்வலத்தை முதல்வர் டாக்டர் மருதுதுரை தொடங்கி வைத்தார்.

 

பின்னர் நடந்த கருத்தரங்கிற்கு முடநீக்கியல் துறை தலைவர் டாக்டர் குமரவேல் தலைமை தாங்கினார்.

மருத்துவக்கண்காணிப்பாளர் மத்தியாஸ், புனர்வாழ்வுதுறை டாக்டர் பாலமுரளி, முடநீக்கியல் டாக்டர் கிஷோர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூத்த பிசியோதெரபிஸ்ட் சுமதி வரவேற்றார்.

 

கருத்தரங்கில் மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் மருதுதுரை பேசியதாவது:-

 

நோயாளிகளை இயல்புநிலைக்கு திரும்ப கொண்டு வருவதில் பிசியோதெரபிஸ்ட் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

 

மருத்துவ சிகிச்சையில் பிசியோதெரபியின் பங்கு மிக முக்கியம் ஆகும். விபத்து, அறுவை சிகிச்சைகளில் பாதிக்கப்பட்டவர்கள், பக்கவாதம் வந்தவர்கள் இயல்புநிலைக்கு திரும்புவதற்கு பிசியோதெரபி மிக முக்கியம்.

 

ஒருவரை நோய் தாக்கும் முன்பு எந்த நிலையில் இருந்தாரோ மீண்டும் அதே நிலைக்கு திரும்ப கொண்டு செல்வது தான் பிசியோதெரபி.

 

விபத்துக்களில் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டு எழுந்து நடக்க முடியாமல் சக்கரநாற்காலியில் வருபவர்கள் கூட தன்னைத்தானே பாதுகாத்துக்கொண்டு, மீண்டு வருவதற்கு பிசியோதெரபிஸ்ட்களின் பங்கு மிக அதிகம்.

 

எனவே நோயாளிகளின் வாழ்வை இயல்பு நிலைக்கு மீட்டுக்கொண்டு வருவதில் முக்கிய பங்கு ஆற்றிவரும் பிசியோதெரபிஸ்ட் படிப்பினை பயில்பவர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடும், மனிதநேயத்தோடும் பயில வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

இந்த நிகழ்ச்சியில் பிசியோதெரபிட்டுகள் அம்பிகை, முருகேசன், தர்மேந்திரன், அருணசிவக்குமார், நிஷார், கற்பகம், டெக்னீசியன்கள் சுமதி, ரமேஷ், வெங்கடேசன், தேவந்திரன், கவிதா மற்றும் மருத்துவ மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )