தஞ்சை மாவட்டத்தில் இரவு பெய்த கனமழையால், மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்ததால் பொதுமக்கள் அவதி. இரண்டு வீடுகள், 50 க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம். பத்து கோழி, இரண்டு முயல் உயிரிழப்பு.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று இரவு தஞ்சாவூரில் 12 செ. மீட்டரும், வல்லத்தில் 17 செ.மீட்டரும், பூதலூரில் 16 செ மீட்டரும்,
கல்லணையில் 15 செ மீட்டரும், நெய்வாசல் தென்பாதியில் 11 செ மீட்டரும், கும்பகோணத்தில் 1.2 செ மீட்டரும் கீழணை பகுதியில் 1.8 சென்டி மீட்டரும்,
பட்டுக்கோட்டையில் 8.8 சென்டி மீட்டரும், மதுக்கூரில் 3.6 சென்டிமீட்டரும் மழை அளவு பதிவாகி உள்ளது.
மாவட்டத்திலுள்ள இருபத்தி ஒரு மழை அளவு நிலையங்களில் மொத்தமாக 105.9 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.
இந்த கன மழை காரணமாக தஞ்சாவூர் காயிதேமில்லத் நகர், வல்லம் பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் புகுந்தது.
முழுங்கால் அளவு தண்ணீர் நிற்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக இரண்டு வீடுகளின் பக்கவாட்டு இடிந்து விழுந்துள்ளது. மேலும் 50 மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
இந்த கனமழையால் பத்து கோழிகள், இரண்டு முயல்கள் உயிரிழந்துள்ளன.