தஞ்சை மாவட்டம் கணபதி அக்ரஹாரம் ஸ்ரீ மகா கணபதி ஆலயத்தில் சூலபாணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தவாரி காவிரி ஆற்றில் வெகு சிறப்பாக நடைப்பெற்றது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தஞ்சை மாவட்டம் கணபதி அக்ரஹாரம் ஸ்ரீ மகா கணபதி ஆலயத்தில் சூலபாணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தவாரி காவிரி ஆற்றில் வெகு சிறப்பாக நடைப்பெற்றது. காவிரி ஆற்றில் புனித நீராடி பெண்கள் பாலி கரைத்தனர்.
சோழர். நாயக்கர், மராட்டிய மன்னர்களால் வழிபட்ட ஸ்தலமாகவும், அகத்திய முனிவரால் சதுர்வேதி மங்களம். காவிரி கரையில் அமைந்துள்ள ஐங்கரத்தான் ஆலயம் என போற்றப்பட்ட தஞ்சை மாவட்டம் கணபதி அக்ரஹாரம் ஸ்ரீ மகா கணபதி ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உற்சவ விநாயகர் அருகம்புல், எருக்கம்பூ. சாமந்தி பூ, ரோஜாப் பூ உள்ளிட்ட மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வெள்ளி மூஷிக வாகனத்தில் அமர்ந்தபடி பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாளித்தார்.
கோவில் வடபுற பிரகாரத்தில் கலசங்கள் வைத்து சிவர்ச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் நடத்தப்பட்டு பூராணஹதியுடன் ஹோமம் பூர்த்தியாகி பஞ்சமுக தீபாராதனை காண்பிக்கப்பட்டன.
தொடர்ந்து மங்கள வாத்யங்கள் இசைக்க வான வேடிக்கையுடன், யானை முன் செல்ல உற்சவர் வீதி உலா சென்று காவிரி கரைக்கு வந்தடைந்தார்.
அங்கு சூலபாணிக்கு விபூதி, திரவிய பொடி, எலுமிச்சம்பழம், பஞ்சாமிர்தம், பால், தயிர். மஞ்சள்பொடி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்று. காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைப்பெற்றது.
மூன்று முறை காவிரி ஆற்றில் சூலபாணி மூழ்கி நீராடினார். காவிரி ஆற்றில் புனித நீராடிய பெண்கள் லெட்சுமி .கல்யாணம், ராதா கல்யாணம் என பாடி பாலியை ஆற்றில் கரைத்தனர்.