தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் பள்ளி சிறுவனை ஓரினச் சேர்க்கைக்கு கட்டாயப்படுத்திய 2 சிறுவர்களை செங்கிப்பட்டி போலீசார் கைது செய்து சிறுவர் இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த சிறுவனை சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த தனியார் மற்றும் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் இரண்டு சிறுவர்கள் அழைத்துக் கொண்டு வெளியில் சென்றுள்ளனர்.
பின்னர் அந்த சிறுவனை தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்த முயற்சி செய்துள்ளனர். இதனால் அந்த 12 வயது சிறுவன் பயந்து போய் கத்தி உள்ளான்.
சிறுவனின் அலறல் சத்தம் அக்கம்பக்கத்தில் கேட்டால் பிரச்னை ஆகிவிடும் என்பதால் பத்தாம் வகுப்பு படிக்கும் அந்த இரண்டு மாணவர்களும் இதை வெளியில் தெரிவித்தால் தொலைத்து விடுவோம் என்று 12 வயது சிறுவனை மிரட்டி உள்ளனர். இருப்பினும் இதுகுறித்து அந்த 12 வயது சிறுவன் தன் பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் செங்கிப்பட்டி போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் செங்கிப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் நடந்த சம்பவம் உண்மை என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து போக்சோ சட்டத்தில் 10ம் வகுப்பு படிக்கும் அந்த 2 மாணவர்களையும் போலீசார் கைது செய்து தஞ்சையில் உள்ள சிறுவர் இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.