BREAKING NEWS

தஞ்சை, வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தஞ்சை மாவட்டம் கீழ திருப்பந்துருத்தி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஈரப்பத அளவை காரணம் காட்டி நெல் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் நெல் மூட்டைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சை, வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தஞ்சை மாவட்டம் கீழ திருப்பந்துருத்தி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஈரப்பத அளவை காரணம் காட்டி நெல் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் நெல் மூட்டைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை அறுவடை பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது இதுவரை 2 லட்சத்தி 10 ஆயிரம் டன் வரை நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

 

 

இன்னும் 10 ஆயிரம் டன் வரை கொள்முதல் செய்ய வேண்டி உள்ளது இந்நிலையில் ஏற்கனவே பெய்த மழையினால் அறுவடை செய்த நெல்மணிகள் நனைந்ததால் ஈரப்பதளவை 22 சதவீதமாக உயர்த்தி வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

 

 

இதை அடுத்து மத்திய குழு ஆய்வு செய்து ஈரப்பதளவை 19% ஆக உயர்த்தி வழங்கியது இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கி மழை பெய்து வருவதால் ஈரப்பத அளவு உயர்ந்து உள்ளதால்,

 

 

தஞ்சை மாவட்டம் கீழத்திருப்பதி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 26 ஆம் தேதியிலிருந்து நெல் கொள்முதல் பணி நடைபெறவில்லை..  இதை எடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் இன்று தஞ்சை திருக்காட்டுப்பள்ளி சாலையில் நெல் மூட்டைகளுடன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

நுகர் பொருள் வாணிப கழக மண்டல அதிகாரி உமா மகேஸ்வரி சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி விவசாயிகள் கொட்டி வைத்துள்ள நெல்லின் ஈரப்பத அளவை பார்வையிட்டார்.

 

 

27 சதவீதம் வரை நெல் ஈரப்பதமாக இருந்தது இதை எடுத்து உலர் இயந்திரம் வரவழைத்து நெல்மணிகளை உலர வைத்து கொள்முதல் செய்ய உத்தரவிட்டார் இதை அடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )