BREAKING NEWS

தஞ்சையில் ஆப்தமித்ரா – பேரிடர் கால நண்பன் பேரிடர் மீட்பாளர்களுக்கான பயிற்சி முகாம், தன்னார்வலர்கள் பங்கேற்பு.

தஞ்சையில் ஆப்தமித்ரா – பேரிடர் கால நண்பன் பேரிடர் மீட்பாளர்களுக்கான பயிற்சி முகாம், தன்னார்வலர்கள் பங்கேற்பு.

 

தஞ்சையில், தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில்,

 

 

ஆப்தமித்ரா – பேரிடர் கால நண்பன் திட்டத்தில் 33 தன்னார்வலர்களுக்கு சிறப்பு பயிற்சி ரெட்கிராஸ் பேரிடர் மேலாண்மை பயிற்சி மையத்தில் நடைபெற்றது.

 

 

 

பேரிடர் மேலாண்மையில் சிறந்த பயிற்றுநர்கள் கொண்டு பேரிடர் மேலாண்மை, பேரிடர் தயார்நிலை, நிலநடுக்கம், நிலசரிவு, வெள்ளம், சுனாமி, சூறாவளி, இடி மின்னல், வறட்சி, அனல் காற்று, குளிரலை, அடிப்படை தேடல் & மீட்பு,

 

 

உடல் நலம், முதலுதவி, உயிர் காக்கும் மருத்துவ சேவை, பாம்பு கடி, தீ பாதுகாப்பு, ரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி அவசர நிலை பாதுகாப்பு குறித்து செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி வழங்கப்பட்டது. 

 

 

இப்பயிற்சியில் பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் மற்றும் அடையாள அட்டையினை முன்னாள் ராணுவத்தினர் நல உதவி இயக்குனர் மேஜர் சரவணன் வழங்கினார்.

 

 

முன்னதாக பயிற்சியில் பங்கேற்ற அனைத்து தன்னார்வலர்களும் பேரிடர் மீட்பு, முதலுதவி, கயிறு முடித்தல், காயங்களுக்கு கட்டு கட்டுதல், பாதிக்கப்பட்டவர்களை சுமந்து செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு செயல்முறை விளக்கத்தினை செய்து காண்பித்தனர்.

 

இந்நிகழ்ச்சியில் ரெட்கிராஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )