தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் பேரணி தஞ்சையில் நடைபெற்றது ஏராளமானோர் கருஞ்சட்டை அணிந்து பங்கேற்பு.

தஞ்சாவூர், தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் பேரணி நடைபெற்றது. ஏராளமானோர் கருஞ்சட்டை அணிந்து, கொடியுடன் பங்கேற்றனர்.
தந்தை பெரியாரின் பிறந்த நாள் செப்டம்பர் 17 சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்ததை அடுத்து தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு இன்று சமூக நீதி நாள் ஊர்வலம் நடைபெற்றது.
தஞ்சை ரயில் நிலையத்திலிருந்து முக்கிய வீதிகள் வழியாக தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே முடிவடைந்த இந்த பேரணியில் பெரியாரின் தத்துவங்கள் முழங்க ஏராளமான திராவிடர் கழகத்தினர் மற்றும் விடுதலை சிறுத்தை கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரணியாக சென்றனர்.
CATEGORIES தஞ்சாவூர்