தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.

திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில்சாலையில் தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உரிய தப்பினார்கள்.
திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை திருச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்கு சொந்தமான பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது ஐ ஐ எம் கல்லூரி அருகே வந்த பொழுது
பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முற்பட்ட போது அவர் மீது மோதாமல் இருப்பதற்காக பேருந்தை வலது பக்கம் திருப்பிய போது பள்ளத்தில் கல்லூரி பேருந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
கல்லூரி பேருந்தில் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என சுமார் 35 பேர் இருந்துள்ளனர்.
இதில் பெண் ஆசிரியர் ஒருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும் சுமார் 15 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்கள்.
பேருந்தில் இருந்தவர்களை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து நவல் பட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டதோடு இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.