தமிழக அரசு அதிரடி உத்தரவு- சம்பளம் கிடையாது.

வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என தமிழக அரசு அதிரடியாக உத்திரவிட்டுள்ளது.ஜூன் 13 முதல் ரேசன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்யவுள்ளதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் ரேசன் கடைஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் பிடிக்கப்படும் என கூட்டுறவு சங்க பதிவாளர் அறிவித்துள்ளார். மேலும் மக்களுக்கு ரேசன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு மாற்றாக பணியாளர்களை ஏற்பாடு செய்ய உத்தரவிட்டுள்ளார்.
CATEGORIES Uncategorized