BREAKING NEWS

தமிழக போலீஸ் ஒன்னும் பண்ணல!” கதறி அழுது வீடியோ வெளியிட்ட பெண் ராணுவ வீரர்

தமிழக போலீஸ் ஒன்னும் பண்ணல!” கதறி அழுது வீடியோ வெளியிட்ட பெண் ராணுவ வீரர்

தமிழக போலீஸ் ஒன்னும் பண்ணல!” கதறி அழுது வீடியோ வெளியிட்ட பெண் ராணுவ வீரர்!.. கலாவதி கூறிய குற்றச்சாட்டில் உண்மை இல்லை.. போலீஸ் விளக்கம்!!

நாட்டின் எல்லைப் பகுதியான காஷ்மீரில் வேலை செய்யும் தமிழ்நாடு மாநிலம், வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த ராணுவ வீராங்கனை வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதாவது தனது வீட்டில் கடந்த ஜூலை மாதம் திருட்டு சம்பவம் நடந்ததாகவும் இருப்பினும் இதுவரை போலீசார் குற்றவாளியைக் கண்டுபிடிக்கவில்லை என்று அந்த பெண் வீராங்கனை கண்ணீர் மல்கப் பேசுகிறார். மேலும், இந்த விவகாரத்தில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டுகிறார்.

வேலூர் மாவட்டம், காட்பாடி நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மகள் கலாவதி காஷ்மீரில் எல்லை பாதுகாப்புப் படை வீரராக இருக்கிறார். கடந்த ஜூலை 24ம் தேதியன்று குமாரசாமி வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 22 சவரன் நகை, பட்டு புடவை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாகப் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கலாவதி குற்றஞ்சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். காஷ்மீரில் இருக்கும் அவர் இது தொடர்பாகக் கண்ணீர் மல்கப் பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

32 வயதான கலாவதி, தன் திருமணத்திற்காக வைத்திருந்த நகைகள் திருட்டுப் போனதாகவும், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கத் தாமதித்ததாகவும் கண்ணீருடன் கூறுகிறார். காட்பாடி வட்டம், பொன்னை அருகே நாராயணபுரம் கிராமத்திலுள்ள அவரது வீட்டில் ஜூன் 24 அன்று திருட்டு நடந்ததாக கலாவதி தெரிவித்தார்.

அப்போது அவரது தந்தையும் சகோதரரும் வயலில் வேலைக்குச் சென்றதாகவும் தாயார் மாடு மேய்க்கச் சென்றிருந்ததாகவும் அவர் கூறுகிறார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “எனது அம்மா திரும்ப வந்து பார்த்த போது எனது திருமணத்திற்காகச் சேர்த்து வைத்திருந்த நகைகள் அத்தனையும் திருடப்பட்டது.

என் அம்மா மாலை 5:30 மணிக்குத் திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டிருந்தது. இதையடுத்து அண்ணன் வந்தவுடன் அன்றைய தினமே புகார் அளித்தனர்.

ஆனால், மறுநாள் ஜூன் 25ம் தேதி முதலமைச்சர் பாதுகாப்புப் பணி இருப்பதாகக் கூறி யாரும் விசாரிக்க வரவில்லை. பின்னர் வந்த போலீஸ் அதிகாரிகள் கைரேகை சேகரித்து, ஜூன் 28ம் தேதி தான் எஃப்ஐஆர் பதிவு செய்தனர்” என்று வேதனை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு CRPF ஜவான், கடந்த ஜூன் மாதம் காட்பாடி அருகே தனது வீட்டில் நகைகள் திருடப்பட்ட வழக்கில் காவல்துறையின் நடவடிக்கை எடுக்கவில்லை என குறித்து CRPF சீருடையில் நமது நாட்டின் ஜம்மு-காஷ்மீர் எல்லையிலிருந்து ஆன்லைனில் நீதிக்காக போராடும் காட்சிகள் சமூக வலைதள பக்கங்களில் வீடியோ வேகமாக பரவி வருகிறது.

திருமணத்திற்காகச் சேர்த்து வைத்திருந்த அனைத்தையும் இழந்துவிட்டதால் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார். இந்த திருட்டு வழக்கு தொடர்பாக போலீசார் பலமுறை தொடர்புகொண்டபோதும், உரிய நடவடிக்கை இல்லை என கலாவதி குற்றம் சாட்டினார். காஷ்மீரில் பணியாற்றும் பெண் வீரர் வெளியிட்ட இந்த வீடியோ இணையத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இதற்கிடையே வேலூர் போலீசார் இது குறித்து விளக்கமளித்துள்ளனர். அதாவது கலாவதியின் தந்தை குமாரசாமி, ஜூன் 24ம் தேதி இது குறித்து புகார் அளித்ததாக போலீசார் கூறினர்.

போலீசார் மேலும் கூறுகையில், “கலாவதியின் திருமணத்திற்காகச் சேர்த்து வைக்கப்பட்டிருந்த பவுன் தங்க நகைகள், ரூ.50,000 ரொக்கம், மற்றும் ஒரு பட்டுப்புடவை திருடுபோயிருந்தன. பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஜூன் 25ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், கைரேகை மாதிரிகள் மற்றும் சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டன.

சந்தேக நபர்களின் செல்போன் தரவுகளை டவர் டம்ப் தொழில்நுட்பம் மூலம் எடுத்துள்ளோம். ஜூன் 29ம் தேதி புகார் அளித்தவர் திருடப்பட்ட நகைகளின் எடை 22.5 பவுன் என்று தெரிவித்தார். முதலில் கலாவதியைத் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்த சந்தோஷ் என்பவர் மீது குமாரசாமிக்கு சந்தேகம் இருப்பதாகக் கூறினார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம்.

விசாரணை தாமதமின்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக கலாவதி கூறிய குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ள காவல்துறையினர்!

CATEGORIES
TAGS