தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் வேலூர் மண்டல தலைவர் பதவி ஏற்பு விழா.

வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி திருச்சியில் வயலூர் டி மார்ட் முன்பு சில்லறை வணிகத்தின் மீதான எதிர்த்து அடையாளம் முற்றுகை போராட்டம்: ஏ. எம். விக்கிரமராஜா வணிகர்களுக்கு அழைப்பு!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் வேலூர் மண்டல தலைவர் பதவி ஏற்பு விழா. இதில் கலந்துகொண்ட ஏ.எம்.விக்கிர மராஜா வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி திருச்சி வயலூர் டி. மார்ட் முன்பு சில்லறை வணிகத்தின் கார்ப்பரேட் கபளீகரத்தை எதிர்த்து நடைபெறும் அடையாள முற்றுகை போராட்டத்தில் வேலூர் மண்டலத்தில் இருந்து வணிகர்கள் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
வேலூர் தொரப்பாடியில் உள்ள அழகம்மாள் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் வேலூர் மண்டல தலைவர் பதவி ஏற்பு விழா நடந்தது.
வேலூர் மண்டல தலைவராக இரா.ப. ஞானவேலு பதவி ஏற்றுக் கொண்டார். இவருக்கு மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதற்கு முன்னதாக வேலூர் செல்லியம்மன் கோவில் அருகில் இருந்து இருபதுக்கும் மேற்பட்ட வாகனங்களில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார் வேலூர் மண்டல தலைவர் இரா. ப.ஞானவேலு. அவருடன் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ. எம். விக்கிரமராஜா அந்த வாகன அணிவகுப்பில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் வேலூர் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் எல். கே.எம். பி. வாசு, காட்பாடி லட்சுமி ஹோட்டல் உரிமையாளர் ரவி மற்றும் வேலூர் கிருஷ்ணகிரி திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்களிலிருந்து பல வணிகர்கள் கலந்து கொண்டனர்.