தாளநத்தம் இல்லாம் தேடி கல்வி மையத்தினை வட்டார கல்வி அலுவலர் ஆய்வு.
தர்மபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றியம், தாளநத்தம் பகுதியில் உள்ள இல்லம் தேடிக் கல்வி மையத்தினை கடத்தூர் வட்டார கல்வி அலுவலர் முருகன் அவர்கள் செவ்வாய்கிழமை பாா்வையிட்டு, உயர் தொடக்க நிலை இல்லம் தேடி கல்வி மையத்தில் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை ஆய்வு மேற்கொண்டனர்.
தன்னார்வளர் சர்மிளா, மாணவ மாணவிகளுக்கு ஆடல், பாடல், புதிா், விளையாட்டுகள், எளிய கணித செயல்பாடுகள், தமிழ் வாசிப்புப் பயிற்சி போன்றவற்றை கற்பித்து வருகின்றனர். மேலும், இல்லம் தேடிக் கல்வி மையங்களில் மாணவா்களின் அடிப்படை திறன்கள் அவ்வப்போது தன்னாா்வலா்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையடுத்து, அங்கு ஆய்வு மேற்கொண்ட கடத்தூர் வட்டார கல்வி அலுவலர் முருகன், பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோவன், மைய பொறுப்பாசிரியர் மனோகரன் ஆகியோர் ஆகியோா் தன்னார்வலர்களைப் பாராட்டினர்.
அவர்களிடம் பள்ளிகளில் உள்ள கற்பித்தல் வளங்களைப் பயன்படுத்துதல். மாணவர்களின் வாசிப்பு திறன் கற்றல் கற்பித்தல் அடைவு ஆகியவை சோதிக்கப்பட்டது, கலைத்திறன் போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினர், தொடர்ந்து கற்றல் அவசியம் கற்பதில் ஏற்படும் குறைகள் குறித்து கேட்டறிந்தனர்.