தி.மு.க.அரசின் உதவி திட்டங்கள் வெறும் போட்டோ ஷூட் மற்றும் விளம்பரங்களுடன் நின்று விடுவதாக மக்கள் நீதி மையத்தின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் கோவையில் தெரிவித்துள்ளார்.

2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர் கொள்ளும் விதமாக மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தமிழகம் தழுவிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.கோவையில் செப்டம்பர் 17 ம்தேதி பயணத்தை துவக்க உள்ள நிலையில்,இது தொடர்பான ஆலோசணை கூட்டம் கோவையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர், மக்கள் தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்கு மக்கள் நீதி மையம் முதலில் குரல் கொடுப்பதாகவும்,அந்த வகையில் தற்போது,சேவை பெறும் உரிமை சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல் கூறியுள்ளதை சுட்டி காட்டிய அவர்,தற்போதைய தி.மு.க.அரசு தேர்தல் வாக்குறுதியிலேயே கூறியுள்ளதாகவும்,எனவே,அரசு சேவைகள் மக்களுக்கு விரைவாக கிடைப்பதற்கு,சேவை பெறும் உரிமை சட்டத்தை தமிழக அரசு உடனடியாக அமல் படுத்த வேண்டும் எனவும் இது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மக்கள் நீதி மையம் எடுத்து செல்ல உள்ளதாக கூறினார்…தொடர்ந்து பேசிய அவர்,தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அறிவிக்கும் உதவி திட்டங்கள் வெறும் போட்டோ ஷூட் மற்றும் விளம்பரங்களுடன் நின்று விடுவதாகவும், செயல் முறை படுத்தல் இல்லை என குற்றம் சாட்டினார்.