BREAKING NEWS

திண்டுக்கல், சின்னாளப்பட்டி, இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் 19 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

திண்டுக்கல், சின்னாளப்பட்டி, இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் 19 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

சின்னாளப்பட்டி மேற்குவட்ட இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் 19 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

மேலும் சிலைகளை கரைக்க மறுத்ததால் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறையினர்.

 

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு ஆத்தூர் ஒன்றியம் சின்னாளபட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பாக 19ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை பிஜேபி மாநில செயற்குழு உறுப்பினர் பழனிவேலுசாமி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

 

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள், பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் கலந்து கொண்ட நிர்வாகிகள் அனைவருக்கும் திண்டுக்கல் மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஜெயராம் தலைமையில் மண்டல தலைவர் விக்கேஸ் முன்னிலையில் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் அஜித்குமார் இணைந்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

 

இவ்விழாவில் மேளதாளங்கள் முழங்க ஊர்வலம் சிறியவர் முதல் பெரியவர் வரை 500க்கும் மேற்பட்ட இந்து அமைப்பினர் கலந்து கொண்டு விழாவை உற்சாகமாக கொண்டாட துவங்கினர்.

 

இந்தவிழாவில் சிறப்புரை நிகழ்வும் அதனைத் தொடர்ந்து ஊர்வலம் சின்னாளபட்டி பேருந்து நிலையத்தில் துவங்கி பூஞ்சோலை, தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி, பொன்னன் கடை சாலை, சேவா சங்கம், அஞ்சுகம் காலனி சாலை, புதுக்கோட்டை, ஆதிலட்சுமிபுரம், சமத்துவபுரம் சாலை, கோடங்கிபட்டி, செம்பட்டி, புது கோடாங்கி பட்டி, ஆத்தூர் மற்றும் கோழிப்பண்ணை பிரிவு இதரப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் காவல்துறையினர் அதனை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 

வட்டாச்சியர் முன்னரே அறிவித்த டொம்பன் குளத்தில் சிலைகளை கரைப்பதற்காக வாகனங்கள் மூலம் விதவிதமான வடிவமைப்பில் 15க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் முளைப்பாரிகளுடன் வந்தடைந்தது.

 

 

பின்னர் காவல்துறையினர் உதவியுடன் சிலையை கரைக்க முற்பட்டபோது அங்கே முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குளத்தில் நீர் அசுத்தம் நிறைந்து காணப்பட்டவுடன் அதை கண்ட இந்து முன்னணி அமைப்பினர் நாங்கள் இந்த அசுத்தமான நீரில் எங்கள் விநாயகர் சிலைகளை கரைக்க மாட்டோம்.

 

 

நாங்கள் ஒரு வாரம் காலம் நோன்பிருந்து இறைவனை வழிபட்டு எங்கள் நேர்த்தி கடனை செலுத்த வந்த நிலையில் இத்தகைய குறைகளை செய்தது யார்? என எங்களுக்கு தெரிய வேண்டும் அல்லது எங்களுக்கு மாற்று ஏற்பாடாவது செய்து தர வேண்டும் என காவல்துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்ட நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்த காவல்துறையினர் எங்கள் கடமைகளைச் செய்ய விடுங்கள் என பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

 

 

அதற்கு இந்து முன்னணியர் எங்களுக்கு காவல்துறையினர் இறுதி வரை ஒத்துழைப்பு கொடுத்ததற்கு நன்றி ‌.எனினும் இந்த ஏற்பாடுகளை செய்துதந்த வட்டாட்சியர் இங்கு வர வேண்டும் அவர்கள் வந்து எங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுத்தால் மட்டுமே நாங்கள் சிலைகளை கரைப்போம் இல்லாவிடில் சிலைகளை அப்படியே வைத்துவிட்டு அமர்ந்து விடுவோம் என கூறினர்.

 

 

அதன் பின்னர் வட்டாட்சியரையும் , சீவல்சரகு ஊராட்சி மன்ற தலைவரையும் மாவட்ட துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தொலைபேசியில் தொடர்பு கொண்டதின் அடிப்படையில் இருவரும் நேரில் வந்து இந்து முன்னணி அமைப்பினரை சமாதானம் செய்து சிலைகளை கரைப்பதற்கு ஆத்தூர் தீயணைப்பு துறையினறை தொடர்பு கொண்டு நீர் ஏற்பாடு செய்து தருவதாக கூறினார்கள்.

 

 

அதன் பின்னர் இந்துமுன்னணி அமைப்பினர் இன்று விட்டு விடுகிறோம் ஆனால் அடுத்த ஆண்டு முதல் எங்களுக்கு நல்ல நீர் நீர்நிலைகள் உள்ள குளங்கள் அல்லது ஆற்றில் சிலைகளை கரைப்பதற்கு ஏற்பாடு செய்து தர வேண்டும் கேட்டுக்கொண்டனர்.

 

 

இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அதனைத்தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீர் ஏற்பாடு செய்து தந்து சிலைகளை கரைத்தனர்.

 

மேலும் துரிதமாக செயல்பட்ட தீயணைப்புத் துறையினறை இந்து முன்னணி வெகுவாக பாராட்டினர்.

மேலும் ஊர்வல விழாவில் அசுபவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க 100க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )