BREAKING NEWS

திண்டுக்கல் ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் பக்தர்கள் திருக்கரங்களால் பாபாவிற்கு பால் அபிஷேகம்.

திண்டுக்கல் ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் பக்தர்கள் திருக்கரங்களால் பாபாவிற்கு பால் அபிஷேகம்.

திண்டுக்கல் நாகல்நகர் பாரதிபுரம் ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் பக்தர்கள் திருக்கரங்களால் பாபாவிற்கு பால் அபிஷேகமும், சிறப்பு பூஜையும், அன்னதானமும் நடைபெற்றது.

திண்டுக்கல் நாகல்நகர் பாரதிபுரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயம். இங்கு பாபாவிற்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகிறது இதனைத் தொடர்ந்து வாரந்தோறும் வியாழக்கிழமை பாபாவிற்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து பாபாவிற்கு பக்தர்கள் திருக்கரங்களால் பால் மற்றும் விபூதி அபிஷேகம் நடைபெற்றது. தினந்தோறும் காலை இட்லி பிரசாதமும், வாரந்தோறும் வியாழக்கிழமை மதியம் அன்னதானமும் நடைபெற்றது மேலும் மாலை சிறப்பு பூஜையும், பஜனையும் தொடங்கி சப்பாத்தி பிரசாதமும் வழங்கப்பட்டது.

Share this…

CATEGORIES
TAGS