BREAKING NEWS

திண்டுக்கல்லில் மாணவர்களை அதிக எண்ணிக்கையில் ஏற்றிச்சென்ற 7 ஆட்டோக்கள் பறிமுதல்

திண்டுக்கல்லில் மாணவர்களை அதிக எண்ணிக்கையில் ஏற்றிச்சென்ற 7 ஆட்டோக்கள் பறிமுதல்

திண்டுக்கல்லில் ஆட்டோக்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையில் பள்ளி மாணவர்களை ஏற்றி ஆபத்தான பயணம் மேற்கொள்வதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் அவர்களுக்கு வந்த புகாரை தொடர்ந்து

திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணன், மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முகாஆனந்த் உள்ளிட்ட போக்குவரத்து அதிகாரிகள் நகர் வடக்கு காவல் நிலையம் அருகே திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது 7 ஆட்டோக்களில் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையில் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்வது தெரியவந்தது. இதையடுத்து 7 ஆட்டோக்களையும் போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Share this…

CATEGORIES
TAGS