BREAKING NEWS

திமுக குடும்பத்தை விட சசிகலா குடும்பமே மேல். திமுக குடும்பத்தில் 6 பேர் முதலமைச்சர்களாக உள்ளனர். முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி விமர்சனம்.

திமுக குடும்பத்தை விட சசிகலா குடும்பமே மேல்.  திமுக குடும்பத்தில் 6 பேர் முதலமைச்சர்களாக உள்ளனர்.  முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி விமர்சனம்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த வள்ளிபட்டு கிராமத்தில் ஆலங்காயம் கிழக்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் எம்.எல். ஏ கோவி.சம்பத்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர் கேசி வீரமணி கலந்துகொண்டு திமுக குடும்பத்தில் 6 பேர் முதலமைச்சர்களாக செயல்பட்டு வருகின்றனர்.

சசிகலா குடும்பம் மாபியா கும்பல் என்று சொல்லிக்கொண்டு இருந்தோம் தற்போது ஆட்சியில் உள்ள திமுக குடும்பத்தை விட சசிகலா குடும்பம் எவ்வளவோ மேல் என்று விமர்சனம் செய்தார்.

இதில் எம்.எல். ஏ செந்தில்குமார் உட்பட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS