திமுகவின் பெயரைச் சொல்லி அணைக்கட்டு பகுதியில் கிராம உதவியாளர் அட்டூழியம்: கண்டுகொள்ளாத வருவாய்த்துறை அதிகாரிகள்!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், பின்னத்துரையில் கிராம உதவியாளராக பணியாற்றுபவர் முருகன்.
இவர் கடந்த 12 ஆண்டுகளாக இதே கிராமத்தில் கிராம உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
குறிப்பாக திமுகவின் பெயரைச் சொல்லி பலரையும் மிரட்டி அவர்கள் மீது மொட்டை பெட்டிஷன் போடுவது, அவர்களை விரட்டி அடிப்பது என பல அதிகாரிகளையும் இவர் மிரட்டி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
அத்துடன் நிற்காமல் இவர் பணி செய்யும் பின்னத்துரை கிராமத்திற்கு அருகில் உள்ள வரதலாம்பட்டு மற்றும் கீழ்க்கொத்தூர் கிராம உதவியாளர்களான பாரதி, ராஜ்குமார் ஆகியோர்களை மிரட்டி அந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களை சந்தித்து இவரே அனைத்து பணிகளையும் கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இவர் மூன்று கிராமங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு வரதலாம்பட்டு, கீழ்க்கொத்தூர் கிராம உதவியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்து அவர்களை மிரட்டி வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக ஒரு பட்டாவிற்கு தலா ரூபாய் 5000 வசூல் செய்கிறார் இந்த முருகன். அதே போன்று உறவுமுறை சான்றிதழுக்கு தலா ரூபாய் 15,000 வசூல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கூட உறவு முறை சான்றிதழை ரூபாய் 15 ஆயிரம் பெற்றுக்கொண்டு ஒரு நபருக்கு பெற்றுக் கொடுத்துள்ளார் இந்த ஜெகஜால கில்லாடி முருகன் என்று சொன்னால் அது மிகையாகாது.
இடங்களை அளக்க அதாவது நிலம் மற்றும் வீட்டு மனைகளை அதன் உரிமையாளர்களுக்கு அளந்து கொடுப்பதாக கூறிக்கொண்டு லைசென்ஸ் உள்ள சர்வேயரை அழைத்துக் கொண்டு வந்து மிரட்டி பணம் பறித்து வருகிறார் இந்த முருகன்.
அதே போன்று தனக்கு பிடிக்காத அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் மீது மொட்டை பெட்டிஷன்களை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு இந்த முருகன் அனுப்பி வருவதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக சப் டிவிஷன் பிரித்து தருவதற்கு ரூபாய் 3000ஐ இவர் வாங்கிக் கொள்வதும் தெரியவந்துள்ளது. இவர் அணைக்கட்டில் தனது பெயரில் இரண்டு வீட்டு மனைகளை வாங்கி வைத்துள்ளார் என்பது நம்பகமான தகவல் ஆகும்.
கேட்டால் என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. என்னை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. ஏனென்றால் நான் திமுக காரன் என்று மார்தட்டுகிறார் இந்த முருகன். நான் பல அதிகாரிகளை, என்னிடம் மோதியவர்களை இங்கு வைக்காமல் அவர்களை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்துள்ளேன் என்று அடுத்தடுத்து வரும் அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுவது,
அவர்களை தலை தெறிக்க ஓட விடுவது என்று தொடர்ந்து இவர் விரும்பத்தகாத செயல்களை செய்து செயல்பட்டு வருகிறார்.
இவரை எதிர் கொள்ள முடியாமல் பல கிராம நிர்வாக அலுவலர்கள் இந்த பகுதிக்கு பணிக்கு வராமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. அப்படியே மீறி வந்தால் அவர்கள் மீது இல்லாதது பொல்லாதது என பெட்டிஷன் போட்டு அவர்களை இடமாற்றம் செய்து விடுகிறார்.
குறிப்பாக கிராம நிர்வாக அலுவலர்கள் இந்த பகுதியில் பொறுப்பு அலுவலர்களாகவே பணியாற்றுகிறார்களே தவிர நிரந்தரமாக பணியாற்ற இவர் விடிவதில்லையாம். இதே நிலைதான் கடந்த 12 ஆண்டுகளாக இந்த பகுதியில் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சொந்த ஊர் ஊனைவாணியம்பாடி ஆகும். இவர் பின்னத்தூரில் ஊராட்சியில் ரௌடி போல் வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனக்கு உயர் அதிகாரிகளாக இருப்பவர்களை அட்ஜெஸ்ட் செய்து கொண்டு அட்ஜெஸ்ட்மென்ட்டிலேயே இவர் காலத்தை ஓட்டி வருகிறார். கடந்த 12 ஆண்டுகளாக எவ்வித பணியிட மாற்றமும் இல்லாமல் ஒரே இடத்தில் இவர் பணியாற்றி வருகிறார் என்பதையும் இங்கே குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும்.
இதற்கு முன்னர் இருந்த ஒரு கிராம நிர்வாக அலுவலருடன் இவருக்கு கைகலப்பு ஏற்பட்டு அது அந்த கிராம நிர்வாக அலுவலரை பணியிடமாற்றம் செய்ய வழி வகுத்ததே தவிர இவர் தன் மீது எவ்வித நடவடிக்கையும் பாயாமல் பார்த்துக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு இருந்த வட்டாட்சியர்கள் குறிப்பாக வேண்டா எதையும் கண்டும் காணாமல் விட்டுவிட்டது தான் இவரது வளர்ச்சிக்கு வழி வகுத்தது என்றே கூறலாம்.
தற்போது வட்டாட்சியராக அணைக்கட்டுக்கு வந்துள்ள சுகுமார் இவர் மீது ஒரு கண் வைத்து இவரது நடவடிக்கைகளை கண்காணித்து நடவடிக்கை எடுப்பாரா?
என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். குறிப்பாக வரதலாம்பட்டு மற்றும் கீழ்கொத்தூர் கிராம உதவியாளர்கள் அவரவர் கிராமங்களில் அவரவர் பணிகளை எவ்வித இடையூறும் இன்றி மேற்கொள்ள வட்டாட்சியர் நடவடிக்கையை முருகன் மீது எடுக்க வேண்டும் என்பதே அனைவரது ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறி உள்ளது. முருகனுக்கு மணிக்கட்டுவாரா வட்டாட்சியர் சுகுமார் என்பது போகப் போகத்தான் தெரியும்.