BREAKING NEWS

திராவிட மாடல் என்பது இந்தியா மட்டும் அல்ல உலகம் முழுவதும் பரவி உள்ளது.. பொங்கி எழுந்த பொன்முடி.

திராவிட மாடல் என்பது இந்தியா மட்டும் அல்ல உலகம் முழுவதும் பரவி உள்ளது.. பொங்கி எழுந்த பொன்முடி.

திராவிட மாடல் என்பது தமிழகம், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவி உள்ளது என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர் ஸ்டாலின் தான் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

 

திராவிட மாடல் என்பது தமிழகம், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவி உள்ளது என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர் ஸ்டாலின் தான் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது அத்திட்டங்களை மக்கள் வரவேற்று பாராட்டி வருகின்றனர். அதேநேரத்தில் எதிர்க்கட்சிகள் திமுக அரசியல் ஆட்சியை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றன. தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. சட்ட ஒழுங்கு சீர் கெட்டுவிட்டது, பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை என்று விமர்சித்து வருகின்றன. அதே நேரத்தில் திராவிட மாடல் என்ற சித்தாந்தத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மேடைதோறும் முழங்கி வருகிறார். ஆனால் திராவிட மாடல் கொள்கையை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஆனால் பாஜக மிக கடுமையாக விமர்சித்து வருகிறது ருக்கிறது. இது ஒருபுறம் உள்ள நிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திராவிட மாடல் உலகமுழுவதும் பரவியுள்ளதாக கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு திமுக தெற்கு மாவட்டம் சார்பில் சைதாப்பேட்டையில் இசை நிகழ்ச்சி நடந்தது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ,மா சுப்பிரமணியன் சென்னை மாநகராட்சி மேயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய அமைச்சர் பொன்முடி, கலைஞர் சைதை தொகுதியில் போட்டியிடும் போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவராக படித்துக்கொண்டிருந்தேன், அப்போது நூறு மாணவர்களுடன் கலைஞருக்காக இங்கு வாக்கு சேகரித்தேன்.

 

சைதை எப்பொழுதும் திமுகவின் கோட்டை, காரணம் மா.சுப்பிரமணியன், மகேஷ்குமார் போன்றவர்களின் கடுமையான உழைப்பு, திராவிட மாடல் தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இப்போது பரவியுள்ளது. கொள்கை ரீதியான பாடல்கள் உருவாக்க வித்திட்டவர் கலைஞர். சடங்கு சம்பிரதாயத்திற்காக கேக் வெட்டி கொண்டாடும் நிகழ்ச்சி மட்டும் அல்ல இது, கலைஞர் வழியில் கொள்கை கோட்பாடுகளை இளம் தலைமுறைக்கு எடுத்துச் செல்வதற்கான கொண்டாட்டம் இது, அவரின் 99 வது பிறந்த நாளை நாம் இவ்வளவு சிறப்பாக கொண்டாடுகிறோம், நூறாவது பிறந்த நாள் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்க்க வேண்டும் என்றார். இந்தியாவிலேயே மிகச் சிறந்த முதலமைச்சராக முதல்வர் ஸ்டாலின் வளம்வருகிறார். 7.5 சதவீத இட ஒதுக்கீடு, இலவச கல்வி, கல்லூரி விடுதி கட்டணம் இலவசம், மகளிர் கல்விக்காகவும், பணிக்காகவும் உழைத்துக் கொண்டிருப்பவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். இவ்வாறு பொன்முடி கூறினார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )