திருச்சி அரசு பள்ளிக்கு முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு.

திருச்சி அரசு பள்ளிக்கு முதல்வர் வருகை முன்னிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 28ஆம் தேதி வருகை தர உள்ளதையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
திருச்சி அரியலூர் மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 28ஆம் தேதி திருச்சி வருகிறார். அன்றைய தினம் காலை திருச்சி காட்டூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தரும் தமிழக முதல்வர் அவர்கள் ” Stem on Wheels ” திட்டத்தினை தொடங்கி வைக்க உள்ளார்.
அறிவியல் சம்பந்தமாக மாணவர்களுக்கு விழிப்புணர்வையும் அறிவியல் சார்ந்த அறிவையும் கற்பிக்கும் வகையில் 100 இரு சக்கர வாகனங்களில் தன்னார்வலர்களை கொண்டு கல்வி கற்பிக்கும் புதிய திட்டத்தை முதல்வர் அவர்கள் கொடியேசைத்து துவக்கி வைக்க இருக்கிறார்.
இந்நிகழ்வில் கோட்டத் தலைவர் மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர் கே என் சேகரன், கல்வித்துறை உயர் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.