திருச்சி திருவானைக்காவல் மேல கொண்டையம் பேட்டை பகுதியை சேர்ந்த திருமணமான பெண் மாயம்.
![திருச்சி திருவானைக்காவல் மேல கொண்டையம் பேட்டை பகுதியை சேர்ந்த திருமணமான பெண் மாயம். திருச்சி திருவானைக்காவல் மேல கொண்டையம் பேட்டை பகுதியை சேர்ந்த திருமணமான பெண் மாயம்.](https://aramseithigal.com/wp-content/uploads/2022/11/IMG-20221122-WA0317.jpg)
திருச்சி திருவானைக்காவல் மேல கொண்டையம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் வயது 29 இவரது மனைவி வைஷாலி வயது 26 என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மனைவி வைஷாலி செல்போனில் யாரிடமோ ரகசியமாக பேசிக் கொண்டிருப்பதை கண்ட கணவர் மனைவியை பல முறை கண்டித்துள்ளார்.
இந்நிலையில் மனைவி வைஷாலி யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினார். கணவர் மோகன்ராஜ் வைஷாலியை உறவினர்கள் வீடு உள்ளிட்ட இடங்களில் எங்கு தேடியும் கிடைக்காததால் இது குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து வைஷாலியை தேடி வருகின்றனர்.
CATEGORIES திருச்சி
TAGS Girl missingகுற்றம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருச்சி மாவட்டம்திருமணமான பெண் மாயம்திருவானைக்காவல்முக்கிய செய்திகள்மேல கொண்டையம் பேட்டை