திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் தின விழா.!
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் தின விழா உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அமர்குஷ்வாஹா, இ.ஆ.ப., தலைமையில் அனைத்து அலுவலர்கள் ஏற்றுக்கொண்டார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி,
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) வில்சன் இராசசேகர், (வளர்ச்சி) ஹரிஹரன், தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி) கோவிந்தன், உதவி ஆணையர் (கலால்) பானு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரஸ்வதி,
மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயகுமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமாவளவன், அனைத்து துறை உயர் அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES திருப்பத்தூர்
TAGS ஆட்சித்தலைவர் அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப.இ.ஆ.ப.குழந்தைகள் தின விழாதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகம்முக்கிய செய்திகள்