BREAKING NEWS

திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் காவலர் பயிற்சி நிறைவு விழா..!

திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் காவலர் பயிற்சி நிறைவு விழா..!

திருப்பத்தூர் மாவட்டத்தில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2 பெண்கள், 14 ஆண்கள் என 16 ஊர் காவல் படை ஆளிநர்களுக்கு 45 நாட்கள் அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டு பயிற்சி நிறைவு விழா ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

 

 

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் கலந்துக்கொண்டு ஊர் காவல் படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

 

 

மேலும் விழாவில் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் விநாயகம், தனிப்பிரிவு ஆய்வாளர் ரஜினிகுமார், ஆயுதப்படை ஆய்வாளர்கள்,உதவி ஆய்வாளர்கள் ஊர் காவல் படைத் தளபதி வெங்கடேசன் துணை தளபதி சத்திய பாலாஜி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS