BREAKING NEWS

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி நைஜீரியர்கள் தங்கி இருப்பதாக புகார்: அப்பகுதியில் போலீசார் தீவிர சோதனை.

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி நைஜீரியர்கள் தங்கி இருப்பதாக புகார்: அப்பகுதியில் போலீசார் தீவிர சோதனை.

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி நைஜீரியர்கள் தங்கி இருப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து ராயபுரம் பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

 

திருப்பூர் ராயபுரம் காதர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான நைஜீரிய இளைஞர்கள் சுற்றி திரிவதாகவும், திருப்பூரில் ஆவணங்கள் எதுவும் இல்லாமல் தங்கி பனியன் துணிகளை வாங்கி தங்கள் நாட்டுக்கு வர்த்தகம் செய்து வருவதாகவும்,

 

தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் வரப்பெற்றதை தொடர்ந்து திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரபாகரன் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் அனில் குமார் தலைமையில் தனிப்படை போலீசார் ராயபுரம், காதர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

நைஜீரிய இளைஞர்களை பிடித்து உரிய ஆவணங்கள் உள்ளதா? என ஆவணங்களை சரி பார்த்து விசாரணை செய்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )