திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி.. அரசு மருத்துவமனையில் துவங்கி. கோர்ட் வீதி. தாலுக்கா அலுவலகம் வழியாக குட்டை திடல் வரை கல்லூரி மாணவ, மாணவியர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலம் சென்றனர்.
இதில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ராயல் லயன்ஸ் கிளப் மற்றும் தனியார் கலைஞர்கள் மற்றும் அறிவியல் கல்லூரி, உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு துண்டு பிரசுரம்களை வழங்கினர்.

மேலும் உடுமலைப்பேட்டை அரசு தலைமை மருத்துவர் உமர் அலி மாணவ, மாணவிகளுக்கு எய்ட்ஸ் நோய் பரவும் விதம். அதனை குணப்படுத்துவது குறித்தும் விளக்கம் அளித்தார் இந்நிகழ்ச்சியில் ராயல் லயன்ஸ் கிளப் தலைவர் யோகானந்த், முன்னாள் ஆளுநர் D.R. துரைசாமி அரிமா.வெங்கடேஷ், அரிமா செந்தில்குமார். மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.
