திருவள்ளூர் மாவட்டத்தில் பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் ஒரே நாளில் 2 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை ஏக்காட்டூரில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சாமு நாசர் தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நம்ம ஊரு சூப்பர் இயக்கம் மூலமாக கிராமங்களில் இன்று ஒரே நாளில் 2- லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்.,
கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏக்காட்டூர் அருகே ஸ்ரீதேவிகுப்பம் பகுதியில் 800 பலவகையான மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியின் துவக்க விழா நடைபெற்றது.
இதில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவுசெய்து தொடங்கி வைத்தனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பயனாளிகள் மூலம் மரக்கன்றுகளை நட்டு வைத்து பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மொத்தம் உள்ள 526 ஊராட்சியில் முதல் கட்டமாக 326 ஊராட்சிகளில் 356 இடங்களில் 2 லட்சத்து 840 மரக்கன்றுகள் ரூபாய் 654, லட்சம் மதிப்பீட்டில் 8,368 பணியாளர்கள் மூலம் நடப்பட்டு பராமரிக்கப்போவதாக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கவுன்சிலர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.