திருவள்ளூர் வட்டார போக்குவரத்து சார்பில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கிடையே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு.

திருவள்ளூர் மாவட்டம் , ஈக்காடு பகுதியில் அமைந்திருக்கும் CSI அரசு உதவி பெறும் பள்ளியில் திருவள்ளூர் வட்டார போக்குவரத்து சார்பில் பள்ளி மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் G. மோகன் கலந்து கொண்டு பள்ளி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார் இதில் கார்களில் பயணிப்பவர் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் மற்றும் குழந்தைகளும் அவர்களுக்குரிய சீட் பெல்ட் பொருத்தப்பட்டு பயணிக்கும் போது அணிந்திருக்க வேண்டும் மற்றும் வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்த கூடாது என்று தெரிவித்தனர்.
அதை தொடர்ந்து மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது ஆபத்தை விளைவிக்கும் என்று தெரிவித்தார் குறிப்பாக இருசக்கர வாகனம் ஓட்டுநர் மற்றும் பயணிப்பவர் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் இரு சக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணிக்க கூடாது என்று தெரிவித்தனர்.
வருங்கால எதிர்காலமான மாணவச் செல்வங்கள் உங்களிடம் தெரிவிப்பது என்னவென்றால் நீங்கள் வாகனத்தை ஓட்டும்போது அனைத்து விதிமுறைகளும் கடைபிடிக்க வேண்டும் உங்கள் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் வாகனத்தை ஓட்டும் பொழுது அரசு விதிமுறை கடைப்பிடிக்க வேண்டும் என்று மாணவச் செல்வங்கள் நீங்கள் கூற வேண்டும் என்று தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் உங்கள் பாதுகாப்பு டிரஸ்ட் மற்றும் சிஎஸ்ஐ உயர்நிலைப்பள்ளி ஈக்காடு மற்றும் உங்கள் பாதுகாப்பு டிரஸ்ட் நுகர்வோர் வழக்கறிஞர் அனிதா சிஎஸ்ஐ பள்ளியின் தலைமை ஆசிரியர் கென்னடி உங்கள் பாதுகாப்பு டிரஸ்ட் தமிழ் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆகப் ராஜா திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாளையம் ஆகியோர் கலந்து கொண்டனர்.