திருவாலங்காட்டில் மிக பழைமையான வண்டார்குழலி உடனாய வடாரண்யேசுரர் கோயில் திருத்தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து,ஓம் நமச்சிவாய , அரோகரா ,என முழக்கமிட்டனர்.

திருவாலங்காடு மார்ச் 24,
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாலங்காட்டில் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ வண்டார்குழலி அம்பிகை உடனாய ஸ்ரீ வடாரண்யேசுர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது
இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரப் பெருவிழா மிக சீறும் சிறப்பு மாக நடைபெறுவது வழக்கம் அது போல் தற்போதும்,நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவின் ஒன்பதாம் நாள் திருவிழாவான திருத்தேர் பவனி நடைபெற்றது.அதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அம்பாள் வண்டார்குழலி உடனாய வடாரண்யேசுரர் எழுந்தருளி நான்கு ரதவீதிகளில் திருத்தேர் பவனி நடைப்பெற்றது. அப்போது பக்தர்கள் வீடுகள் தோறும் தீபாராதனை எடுத்தனர்.தொடர்ந்து இத்தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து அரோகரா அரோகரா என கோஷமிட்டனர்.
CATEGORIES மயிலாடுதுறை