திருவெறும்பூர் அருகே மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தில் மின்சார கோளாறினால் ஏற்பட்ட தீ விபத்து.

திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தில் மின்சார கோளாறினால் ஏற்பட்ட தீ விபத்து உடனடியாக அனைக்கப்பட்டதால் பெருவிபத்து தவிர்க்கப்பட்டது.
திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொது துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனம் உள்ளது இந்த பெல் நிறுவனத்தில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை பெல் நிறுவனத்தின் 50 ஆவது கட்டிடத்தில் மின்சார கசிவினால் திடீரென தீ விபத்து ஏற்பட்டு புகைமூட்டம் ஏற்பட்டது.
உடனடியாக சுதாகரித்துக் கொண்ட ஊழியர்கள் தீயை தீ அணைக்கும் கருவி மூலம் உடனடியாக தீயை அனைத்ததோடு மின்சார ட்ரான்ஸ்பார்மர் நிறுத்தப்பட்டது பெல் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
அதற்குள்ளாகவே அங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் உடனடியாக தீயணை கருவி மூலம் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தினால் இதனால் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த சில மின்சார ஒயர்கள் எரிந்து நாசமானது. இருந்தாலும் சுதாரிப்புடன் தொழிலாளர்கள் உடனடியாக தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதனால் பெல் தொழிற்சாலை சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.