திறந்தவெளியில் மலம் கழிக்கும் அவலம்: எமக்கலாபுரம் ஊராட்சி பொதுமக்கள் கோரிக்கை.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் ஊராட்சிக்குட்பட்ட கைலாசம்பட்டி காலனி ஆதிதிராவிடர் பொதுமக்களுக்கு கழிப்பிட வசதி செய்து கொடுக்குமாறு பலமுறை புகார் அளித்தும் இதுவரை முறையாக கழிப்பிட வசதி ஏற்படுத்தி தரவில்லை.
இதனால் பெண்கள் குழந்தைகள் மலம் கழிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மலம் கழிக்க இடம் இல்லாததால் சாலைகளில் ரோட்டோரம் மலம் கழித்து வருகின்றனர். இதனால் சாலைகளில் செல்வோரை முகம் சுழிக்க வைக்கிறது.
மேலும் மழை காலங்களில் இரவு நேரங்களில் விஷ பூச்சிகள் தொல்லை அதிகமாக இருப்பதால் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
CATEGORIES திண்டுக்கல்
TAGS கழிப்பிட வசதிகைலாசம்பட்டி காலனிசாணார்பட்டி ஒன்றியம் ஊராட்சிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்