தீரன் சின்னமலை அவர்களின் 217 வது நினைவு நாளை ஒட்டி சங்ககிரியில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சென்றனர்.

ஆத்தூர் கொத்தாம்பாடியில் தீரன் சின்னமலை அவர்களின் 217 வது நினைவு நாளை ஒட்டி சங்ககிரியில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சென்றனர்.
தமிழக முழுவதும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் இன்று சங்ககிரியில் நடைபெறும் தீரன் சின்னமலை அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு சென்று வரும் நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்றனர் இதில் ஆத்தூர் ஒன்றிய செயலாளர் சிவசங்கர் உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்களும் மகளிர் அணியினரும் விழாவில் பங்கேற்பதற்காக சென்றனர்.