தூத்துக்குடி ‘நெய்தல்’ திருவிழா மற்றும் 4-வது புத்தகத் திருவிழாவிற்கு கனிமொழி கருணாநிதி எம்.பி அழைப்பு.

திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி சமூகவலையத்தளம் மூலம் தூத்துக்குடி நெய்தல் கலை விழா மற்றும் 4-வது புத்தகத் திருவிழாவிற்கு அழைப்பு விடுத்தார். அதில் கனிமொழி பேசிய உரை:
சென்ற ஆண்டு தூத்துக்குடி மக்களுடைய மிகப்பெரிய ஆதரவோடு வெற்றிகரமாக நாம் நெய்தல் கலை விழாவை அரங்கேற்றி இருக்கிறோம்.
இந்த ஆண்டு ஏறத்தாழ 500 கலைஞர்களுக்கு மேல் 50 கலை வடிவங்களுக்கு மேல் நெய்தல் திருவிழாவில் அரங்கேற இருக்கிறது. சென்ற ஆண்டு தனித்தனியாக நடந்த புத்தகத் திருவிழாவும், நெய்தல் கலை விழாவும் இந்த ஆண்டு ஒன்றாக ஏப்ரல் 21ஆம் தேதி 4வது தூத்துக்குடியில் புத்தகத் திருவிழா தொடங்குகிறது.
28ஆம் தேதி நம்முடைய நெய்தல் கலை விழா துவங்க இருக்கிறது. அதையும் தாண்டி இந்த ஆண்டு ஒரு புகைப்பட கண்காட்சி தூத்துக்குடியை பற்றி நம்முடைய கலைஞர்கள் எடுக்கக்கூடிய புகைப்படங்கள் அங்கே காட்சிப்படுத்தப்படும், சிறந்த புகைப்படங்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படுகிறது.
உங்களுடைய சென்ற ஆண்டு ஆதரவை விட இன்னும் அதிக மகிழ்ச்சி ஆதரவையும் அளித்து இந்த கலைஞர்களின் வாழ்வில் நீங்கள் ஒளியேற்ற வேண்டும் என்று பேசினார்.