தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் ரோந்துப் பணிக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட 7 லட்சம் மதிப்புள்ள 8 இருசக்கர ரோந்து வாகனங்களை ரோந்துப்பணியை கொடியசைத்து துவக்கம்.

தூத்துக்குடி மாவட்டம்: தமிழ்நாடு அரசு தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் ரோந்துப் பணிக்கு வழங்கிய ரூபாய் 7,04,208/- (தலா ரூபாய் 88,026/-) மதிப்புள்ள 8 இருசக்கர ரோந்து வாகனங்களை காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் உத்தரவுப்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். எல்.பாலாஜி சரவணன் அவர்கள் இன்று (23.03.2023) கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அதன்படி ஆறுமுகநேரி, மத்தியபாக போக்குவரத்து பிரிவு, தென்பாக போக்குவரத்து பிரிவு, தாளமுத்துநகர், முத்தையாபுரம், சிப்காட், திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம் மற்றும் குலசேகரபட்டினம் ஆகிய காவல் நிலைய ரோந்துப் பணிக்கு வழங்கினார்.

இந்நிகழ்வின்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன், மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. சுனைமுருகன், உதவி ஆய்வாளர் திரு. மணிகண்டன், போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர்கள் திரு. நாகராஜ், திரு. வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
