தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர் காந்தி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
ராணிப்பேட்டையில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர் காந்தி தூய்மை பணியில் ஈடுபடும் துப்புரவு பணியாளர்களின் பிள்ளைகளை நான் உயிருடன் இருக்கும் வரை கல்வி கட்டணத்தை செலுத்துவேன் என அமைச்சர் நெகிழ்ச்சி.
ராணிப்பேட்டை மாவட்டம்
முத்துக்கடை பேருந்து நிலையம் மற்றும் வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இரண்டு நகராட்சிகளில் அயராத தூய்மைப் பணிகளில் ஈடுபடும் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் அவர்களை கௌரவிக்கும் விதமாக மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு மாநில சுற்றுச்சூழல் துணை செயலாளர் வினோத் காந்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று தூய்மை பணியில் ஈடுபடும் சுமார் 300-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு சேலை வேட்டி மற்றும் 10 கிலோ எடை கொண்ட அரிசி என பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆர் காந்தி
மழை வெயில் மற்றும் கொரோனா காலகட்டங்களில் ஆயராத உழைக்கும் தூய்மை பணியாளர்கள் கடவுளுக்கு நிகராகவும் அவர்களை அனைவரும் வணங்க வேண்டும் என்றும் அதேபோல் தூய்மை பணியில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் பணியில் ஈடுபடும் அனைத்து தூய்மை பணியாளர்களின் பிள்ளைகளை நான் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களுடைய கல்வி கட்டணத்தை நான் உயிருடன் இருக்கும் வரை செலுத்துவேன் அனைவரும் மனங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைச்சர் ஆர் காந்தி பேசினார்..
நிகழ்ச்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள் என பலர் உடனிருந்தனர்..