தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் எதிர்கட்சிதலைவா் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

செங்கோட்டையில் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் எதிர்கட்சிதலைவா் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த பொதுக்குழு செல்லும் என்ற நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும், எடப்பாடியார் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தொடரலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு வழங்கியது.
இதனை தொடர்ந்து, தென்காசி மாவட்டம், செங்கோட்டையில், தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி தலைமையில் அதிமுகவினர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளா் பொய்கை சோ.மாரியப்பன், பொருளாளா் சண்முகையா, மாவட்ட விவசாய அணிச்செயலாளா் பரமகுருநாதன், நகர செயலாளா் கணேசன், அவைதலைவர் தங்கவேலு, பொருளாளா் ராஜா, மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு இணைச்செயலாளா் ஞானராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளா்கள் கருப்பசாமி, ஜாகீர்உசேன், நகர்மன்ற துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன், நகர்மன்ற உறுப்பினா்கள் சுப்பிரமணியன், ஜெகநாதன், முத்துப்பாண்டி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினா் திலகர், நகர எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகி சக்திவேல், மாவட்ட பிரதிநிதி லெட்சுமணன், வழக்கறிஞா் அருண் உள்பட அதிமுக நிர்வாகிகள் பலா் கலந்து கொண்டார்.