தென்மண்டல அளவிலான சிலம்பாட்ட போட்டியில் மாஸ்டர் முனைவர் பெருமாள் தலைமையில் பங்கேற்றனர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற தென்மண்டல அளவிலான சிலம்பாட்ட போட்டியில் மானாமதுரை வீரவிதை விளையாட்டு மற்றும் தற்காப்பு கலைகளின் பயிற்சி அறக்கட்டளை சார்பாக 57 பேர் மாஸ்டர் முனைவர் பெருமாள் தலைமையில் பங்கேற்றனர் .பல்வேறு விதமான பிரிவுகளின் படி நடைபெற்ற போட்டியில் தனித்திறமையில் 25பேர் முதல்இடத்தையும்,15பேர் இரண்டாம் இடத்தையும்,10 பேர் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.சண்டைபிரிவில் 15 பேர் முதல் இடத்தையும்,7 பேர் இரண்டாம் இடத்தையும்,5 பேர் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.அதிக அளவில் பதக்கங்களை வென்று சிவகங்கை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களையும்.இதற்கு பயிற்சி அளித்த மாஸ்டரையும் ஊர்பொதுமக்கள் பாராட்டினார்கள்..
CATEGORIES சிவகங்கை
