தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் கூடைப்பந்தாட்ட போட்டி…… 450பள்ளி மாணவர்கள் பங்கேற்பு.
செங்கை ஷங்கர், செங்கல்பட்டு.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் இயங்கி வரும் புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் கூடை பந்தாட்ட போட்டி நேற்று முதல் துவங்கியது. இந்த போட்டி தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது.
இதனை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து போட்டிக்கான ஜோதி ஏற்றப்பட்டது.
இந்த போட்டியில் தமிழ்நாடு பாண்டிச்சேரி கேரளா ஆந்திரா மகாராஷ்டிரா உத்தரகாண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 450-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்கின்றனர்.
இதில் அன்டர் -8, அன்டர் -11, அன்டர் – 14 மற்றும் அன்டர் -19 என தனித்தனியாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டியின் துவக்கவிழாவில் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற பரதநாட்டியம், மயிலாட்டம், சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு கலைநககழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், மறைமலைநகர் நகர்மன்ற தலைவர் ஷண்முகம் மற்றும் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.