தேனி புதிய பேருந்து நிலையம் அருகில் நேற்று இரவு ஜெராக்ஸ் கடை உள்ளிட்ட 5 கடைகள் திருட்டு மோப்ப நாயுடன் போலீசார் விசாரணை.

தேனி புதிய பேருந்து நிலையம் அருகில் நேற்று இரவு ஜெராக்ஸ் கடை உள்ளிட்ட 5 கடைகள் உடைப்பு. சுமார் ஆறு லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை. மோப்ப நாயுடன் போலீசார் விசாரணை.
தேனி புதிய பேருந்து நிலையம் அருகில் பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தை சுற்றி உள்ள வேலவன் ஜெராக்ஸ் கடை சென்னை கூல்ட்ரிங்ஸ் கடை துர்கா வாட்டர் சர்வீஸ் கடை அம்மன் பத்திரப்பதிவு எழுதும் அலுவலகம் என்எஸ்கே ஜெராக்ஸ் கடை உள்ளிட்ட ஐந்து கடைகளில் நேற்று நள்ளிரவு ப்ரம்ம நபர்கள் கடைகளை உடைத்து பணம் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த தேனி நகர இன்ஸ்பெக்டர் மாயா ராஜலட்சுமி தலைமையான போலீசார் சம்பவ இடத்தில் சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். பின்னர் கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் லக்கி வரவழைத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சில கடைகளில் உடைத்த போது பொருட்கள் ஏதும் எடுக்கவில்லை என்றும் சில கடைகளில் சுமார் 6 லட்சம் ரூபாய் மற்றும் பொருட்கள் கொள்ளையடித்து சென்று உள்ளதாக விசாரணையில் தெரிய வருகிறது.
தேனி மாவட்டத்தில் கம்பம் போடி தேனி ஆகிய முக்கிய நகரங்களில் தொடர்ந்து ஒருவாரத்தில் பத்துக்கு மேற்பட்ட இடங்களில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு காரணம் தேனி மாவட்டத்தில் போலீசார் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகவும், காவலர்களின் பணிச்சுமையால் திருட்டு தொடர்பான வழக்கில் மர்ம நபர்களை கண்டுபிடிப்பதில் தொய்வு ஏற்பட்டு இருப்பதாக சில போலீசார்கள் தெரிவித்துள்ளனர்.
தேனி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள மோட்டார் வயர்கள் திருட்டு செல்போன் உள்ளிட்ட பல திருட்டுகள் நடைபெற்று வருவது தொடர்கதையாக உள்ளது.
இதற்கு மாவட்ட எஸ்பி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் தன்னார்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
