தேனி பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுக் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தையம்
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிபட்டியில் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுக் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தையம் மற்றும் கை புறா எல்கை பந்தையத்தை நடத்தினார்கள்.
இந்த மாட்டுவண்டி பந்தையத்தில் தேனி மாவட்டம் மற்றும் திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் இருந்தும் மாடுகள் மற்றும் வண்டி, சாரதிகள் கலந்து கொண்டனர்கள்.
இந்த மாபெரும் மாட்டு வண்டி பந்தையம், தேன்சிட்டு, கரிச்சான், பூஞ்சிட்டு, புள்ளிமான், பெரிய மாடு என 5 வகையான பிரிவுகளில் 180 க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டது.
மேலும் நடைபெற்ற கை புறா பந்தயத்தில் 18 மாடுகளும், மாடுபிடிக்கும் வீரர்களும் கலந்துகொண்டு மாட்டினை கையில் பிடித்து விரைவாக ஓடிச்சென்று 4.கி.மீ எல்லை தொட்டு முதல் மூன்று இடங்களை பிடித்த வீரர்களுக்கும் மாட்டுவண்டி போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கும் ரொக்கத் தொகை பரிசாக வழங்கினார்கள்.
சுருளிப்பட்டியில் இருந்து சுருளி அருவி வரை 8 கிலோமீட்டார் தூரம் உள்ள சாலையில் நடைபெற்ற இந்த போட்டிகளை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.