BREAKING NEWS

தேனி மகிளா நீதிமன்றம் போக்சோ சட்டத்தின் கீழ் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 நபர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்து அதிரடி தீர்ப்பு.

தேனி மகிளா நீதிமன்றம் போக்சோ சட்டத்தின் கீழ் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 நபர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்து அதிரடி தீர்ப்பு.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் 2016 ஆம் ஆண்டு சுரேஷ்குமார் என்ற இளைஞர் ஏற்கனவே திருமணமான நிலையில் முதல் திருமணத்தை மறைத்து 17 வயது சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி அவரது தந்தையாகிய காளிமுத்து மற்றும் அவரது தாய் பேபி அம்மாள் ஆகிய மூவரும் சேர்ந்து சிறுமியை கடத்திச் சென்று கேரளாவில் காளிமுத்துவின் மகள் ஜெயா மற்றும் சோமன் ஆகியோரின் வீட்டில் வைத்து திருமணம் நடத்தி வைத்துள்ளனர்.

 

இந்நிலையில் சிறுமியின் தாய் ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறுமி மீட்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையானது தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் வழக்கு விசாரணை முடிவடைந்து இன்று குற்றவாளிகள் ஐந்து பேருக்கும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் இளைஞர் சுரேஷ்குமார் மற்றும் அவரது தந்தை காளிமுத்து மற்றும் அவரது தாய் பேபி அம்மாள் ஆகிய மூவருக்கும் ஆள் கடத்தல், குழந்தை திருமணம், போக்சோ சட்டம் ஆகிய மூன்று பிரிவின் கீழ் மூவருக்கும் தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் மற்றும் தலா 15 ஆயிரம் ரூபாய் அபராதமும், அதைக் கட்ட தவறினால் மேலும் 4 வருடம் மெய் காவல் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

 

 

மேலும் சிறுமியை கடத்தியதற்கும், குழந்தை திருமணத்திற்கு உதவியாக இருந்த காளிமுத்துவின் மகள் ஜெயா மற்றும் அவரது கணவர் சோமன் ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதம் அதை கட்ட தவறினால் மேலும் இரண்டு வருடம் மெய்க்காவல் சிறை தண்டனை வழங்கி தேனி மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி திலகம் தீர்ப்பு வழங்கினார்.

 

 

மேலும் சிறுமியின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மூன்று லட்ச ரூபாய் வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் ஐந்து பேரையும் காவல்துறையினர் சிறையில் அடைக்க பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

CATEGORIES
TAGS